ஞாயிறு, 9 ஜனவரி, 2011

புகைப்படம்


நீண்ட நாட்களாக ஐயப்பனை (லார்ட் ஐயப்பன் அல்ல. . . என் நண்பன் ஐயப்பன்) புகைப்படம் எடுத்துத் தருவதாகச் சொல்லி நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், ஓடிக்கொண்டிருந்த நாளை பிடித்து நிறுத்தினான் அவன். 

'இன்று அவசரமாக புகைப்படம் தேவைப்படுகிறது. எடுத்துக்கொடு.' என்றான். 

இனியும் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்க இயலாது. மனதுக்கு பிடித்தவர்களிடம் மறுப்பு தெரிவிப்பதில்லை மனம்.

அன்றைய பிற்பகலில் அவனுடைய புதிய வீட்டில் வைத்து சில புகைப்படங்களை எடுத்துக் கொடுத்தேன். 

சில நாட்களுக்குப் பிறகு கேட்டான். 'எல்லாரும் ஃபோட்டோ அழகாக இருக்குன்னு சொல்றாங்க. நான் என்னோட வீட்ல ஒரு படத்த பெருசா வைக்கலாம்னு நினைக்கிறேன். நீ என்னடா நினைக்கிற?'

ரசிப்பது அழகான உணர்வு., அதுவும் தன்னைத்தானே ரசிப்பது இளமையின் அழகு. தன்னைத்தானே ரசிக்காதவர்களால் அடுத்தவர்களை ரசிக்க முடியாது. பொறமைக் கொள்ளத்தான் முடியும்.  தன்னை முழுமையாய் ஏற்றுக்கொள்கிறவர்கள், அடுத்தவர்களையும் முழுமையாய் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது என் கருத்தாக இருந்தது. இதில் பாதியை ஐயப்பனிடம் சொன்னேன். அவனும் ஏற்றுக்கொண்டான்.

நாம் வெளியே சென்றிருக்கும் போது, நாம் வீட்டிலிருப்பது கடவுளின் தன்மை. அது நமக்கு சாத்தியமில்லை. ஆனால்... அதை ஒரு புகைப்படம் சாத்தியப்படுத்தி விடுகிறது. 

ஒரே நேரத்தில் நாம் வெளியிலும் இருக்கலாம்., வீட்டிலும் இருக்கலாம். அதற்காக நாம், உலகத்தின் முதல் புகைப்படத்தை எடுத்த நிஸ்ஃபோரே  நியேப்சுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். 

2 கருத்துகள்:

dashboard சொன்னது…

டேய் என்ன டா? ஸ்டேடியாதான் இருக்கியா? முதல் வரியில இது வரை சொல்லி சொல்லி போட்டோ எடுக்காம ஏமாத்திட்டு இருந்தேன்னு எழுதிட்டு அடுத்த வரியில மனசு மறுப்பு சொல்றது இல்லன்னு சீன் போடுற...!!!?? நீ என்னைக்குதான் சொன்ன மாதிரி போட்டோ எடுத்து கொடுத்துருக்க? இந்த போட்டோவை எடுத்துக்க ஐய்யப்பன் என்ன கஷ்ட்டப்பட்டாரோ?

விடிஞ்சிரிச்சிடா.... எந்திரிச்சி போயி பல் விளக்கி, காப்பி, கீப்பி குடிச்சுட்டு அடுத்த வேலைய பாருடா வெண்ணை... சரி எனக்கும் ஒரு போட்டோ எடுக்கணும். எப்படி?

ஸ்நேகிதன் சொன்னது…

உன்னை மாதிரி அடங்காம அலையிறவன ஃபோட்டோ எடுக்கிறதில்லன்னு நான் சபதம் பண்ணிருக்கிறேன் மாப்ள...(என் சீரியசான ஃப்ளாக்க காமெடி ஆக்கிட்டியடே.)

கருத்துரையிடுக