வெள்ளி, 14 ஜனவரி, 2011

மாடு மேய்க்கலாம் வாங்க


(கடிகார சுற்றில் நான்கு மணி நேரத்தை காட்டிக் கொண்டிருப்பது சுகுமார்.)  


நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நண்பன் ஒருவனை தொலைபேசியல்  சந்திக்க வேண்டியதாக இருந்தது. திருமணம் ஆன பிறகு ஆண்களின் ஆட்டம் அடங்கிவிடும். ஆனால் இவன் அடங்கவில்லை. இன்னும் என்னை கிண்டலடிப்பதிலேயே இருந்தான்.

எங்கள் நட்பு பத்து வருட பழமை நிறைந்தது. நாங்கள் இருவருமே குங்குமம் வார இதழில் வேலைபார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதும் இவன் இப்படித்தான். இப்போதும் இப்படித்தான். உங்களுக்கு களைப்பாக இருந்தால் க்ளுக்கோஸ் தேவை இல்லை. இவன் பக்கத்தில் இருந்தால் போதும்.

இவனுடைய புனைப்  பெயர் க்ளைவ் பாஸ்கின். உண்மையான பெயர் சுகுமார்.  நான் அவனை ராபர்ட் கிளைவ் என்று அழைப்பதுண்டு.

இப்போது ராஜ் டிவியில் 'பீச் கேர்ல்ஸ்'  தொடரை இயக்கிக் கொண்டிருக்கிறான். 'அடுத்த ஆண்டு திரைப்படம் இயக்க வேண்டியதுதான்.' என்றான்.

'இந்த ஆண்டு நான் இயக்குனர் ஆகாவிட்டால் என் குலத் தொழிலை பார்க்கப் போகவேண்டியதுதான்.' என்றேன் நான்.

'உன் குலத் தொழில் என்ன?' இது அவன்.

'பனை மரம் ஏறுவது.'

'நீ உன் குலத் தொழிலுக்கு போக வேண்டாம். மாடு மேய்க்கப் போவதே சிறந்தது.' என்றான். இப்படிச் சொன்ன அவன் வாய் முகூர்த்தம், இரண்டு நாட்க்களிலேயே அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

நான் பணிபுரிய காத்திருந்த திரைப்படத்தின் இயக்குனர், என்னை பணிக்கு அழைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதைத் தெரிவித்தார். சிக்கலுக்கான காரணத்தையும் சொன்னார்.

இதுவரை தமிழ் சினிமாவில்... யார் முன்னால் காரணங்கள் வைக்கப்படுகிறதோ, அவர் வெளியேற்றப்படுகிறார் என்று பொருள். எப்படியோ! ராபர்ட் கிளைவ் சொன்னதுபோல் நான் மாடு மேய்க்கப் போவது பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால்... சென்னையில் மாடு மேய்க்க இடம் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மேலும் ஒரு கவலை வந்துகொண்டிருக்கிறது. ராபர்ட் கிளைவ் என்னை சந்திக்க வரப்போகிறான்.

இப்போதே குபீர் என்று வேர்க்கிறது. மாடு மேய்ப்பதை விட கடினம், இவனை மேய்ப்பது.

    

6 கருத்துகள்:

dashboard சொன்னது…

.இது என்னடா தலைப்பு? "மாடு மேய்க்கலாம் வாங்க"!!??
இன்னும் "சுயமா எதுவும் சாதிக்கணும்" ன்னு உனக்கு தோணவே இல்ல பாத்தியா? மாடு மேய்க்கவும் உனக்கு துணைக்கு ஒரு ஆள் தேவையா இருக்கு!
ப்ளாக் நல்லா இருக்கு... ஆனா உன்கிட்ட இன்னும், இன்னும்... க்ரியேடிவ்வா எதிர்ப்பாக்குறேன்டா.

நீயே உனக்கு ஆப்பு அடிசுக்குவேன்னு எல்லோருக்கும் நல்லா தெரியும். அதுக்கு எதுக்கு இப்படி ஒரு விளம்பரம்?

ஸ்நேகிதன் சொன்னது…

உன்னோட விமர்சனத்துக்கு நன்றி. ஆனா... நீ கொஞ்சம் அடங்கணும் மாப்ள... சொந்தமா அடிச்சாலும், ஆள் வச்சி அடிச்சாலும்... ஆப்படிக்க இடமில்லடே. எல்லாருக்கும் ஒடம்புலத்தான் ஆப்பு. எனக்கு ஆப்புலதான் உடம்பே. வரட்டுமா பாப்பு.

Sathish Kumar சொன்னது…

வாங்க...வாங்க...!
சுகு சார் நமக்கும் தோஸ்து தான்...!
அதான் மேல கொட்ட எழுத்துல மகிழ மரம்னு போட்டாச்சுல்ல, அப்புறம் என்ன கீழ போதி மரம் இல்லன்னு ஒரு அட்டாச்மென்ட்டு...! குசும்பு...??!!
வரும் போதே மாடு மேய்க்க கூப்ட்ட எப்புடி...!
சரி..Followers widget எங்க???

இதுக்குள்ளையும் வந்து போறது....!!!
http://microscopicalview.blogspot.com/
http://vinmukil.blogspot.com/

ஸ்நேகிதன் சொன்னது…

சதிஸ் குமார்... இது போதி மரம் அல்ல என்று போட்டதற்கு பதிலாக, இது போதை மரம் அல்ல என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? உங்க பிளாக்குக்கும் ஒரு ரவுண்ட் அடித்துவிடுகிறேன்.

க.பாலாசி சொன்னது…

ஹா...ஹா... லொல்லுதாங்க உங்களுக்கு... நைஸ் போஸ்ட்...

ஸ்நேகிதன் சொன்னது…

நன்றி பாலாசி. உங்கள் ப்ளாக் படித்தேன். சிறப்பு.

கருத்துரையிடுக