திங்கள், 31 ஜனவரி, 2011

நீங்க நல்லவரா? கெட்டவரா?



29 .01 .2011 - ராஜ் டிவி ஒளிப்பதிவுக் கூடம் - பீச் கேர்ல்ஸ் நிகழ்ச்சி.

பொழுது சாயும் நேரம் துவங்கியது... வில்லன் நடிகர் சம்பத்தின் பேட்டி. இது ஒரு லாஜிக் இல்லாத மேஜிக் நிகழ்ச்சி. இதில் கலாய்ப்பதும் - கலாய்க்கப்படுவதும்தான் முக்கிய அம்சம். இதில் வில்லன் நடிகர் எப்படி நடந்துகொள்வார் என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

நண்பன் சுகுமார் இயக்கிக்கொண்டிருந்தான் - சம்பத் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார். அவர் பதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு செட்டில் இருந்த எல்லோருக்குமே இருந்தது.

அவர் தன் வில்லன் தன்மையை மாற்றாமலே, ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கூர்மையாக கவனித்தபோதுதான்... அவர் இறுக்கமாகவே கலாய்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.


கடைசி செக்மண்டில் 'நீங்கள் எதற்காக பொங்குவீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

மொக்கையான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்குமே ஆச்சரியம். பதில் சீரியசாக இருந்தது.

'சென்னை சாலைகளில் பைக் ஓட்டும் பலர், குழந்தைகளோடு போகும் போது, தவறுதலாக பைக் ஓட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் உயிரை மதிக்கவில்லை, ஆனால்... குழந்தையின் உயிரை மதிக்க வேண்டும். குழந்தைகளைக் கொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை. மட்டுமல்லாமல், தான் ஒழுக்கம் கெட்டு நடப்பதோடு... தன் குழந்தைகளுக்கும் ஒழுக்கக்கேட்டை கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வருகிறது.'

பாஸ்... நீங்க வில்லனாக இருந்தாலும், நல்லவரு.



6 கருத்துகள்:

arasan சொன்னது…

உண்மைதான் நண்பா ...
அவர் பொங்குவதில் தவறு இல்லை ...
நான் பல நேரங்களில் பொங்கியது உண்டு ....

ஸ்நேகிதன் சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி அரசன். அநீதியைப் பார்த்து கோபப்படுவதுதான் மனித இயல்பு. ஆனால்... பெரும்பாலான மனிதர்கள் அநீதியை நீதி என்று ஏற்றுக்கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. கோபப்படும் நடிகர் சம்பத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

dashboard சொன்னது…

Very true...

ஸ்நேகிதன் சொன்னது…

நன்றிகள் ஆயிரம் நண்பனே...

maharajan iyappan சொன்னது…

நல்ல அனுபவம் இல்ல...? சம்பத் கடைசி வரைக்கும் சிரிக்காமலேயே நடிக்க ட்ரை பண்ணாரு. ஒர்க் அவுட் ஆகல. ஆனா பைக் மேட்டர்ல ஒர்க் அவுட் ஆயிட்டாரு. இந்த விஷயத்த நீ சொன்னதுல உன் கூட கைகுலுக்கிக்கறேன்.

ஸ்நேகிதன் சொன்னது…

ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து. வில்லன் நடிகரான சம்பத்திடமிருந்து இப்படி ஒரு சமுக பார்வையை நான் எதிர் பார்க்கவில்லை. வில்லனுக்குள் ஒரு ஹிரோ ஒழிந்திருப்பதுதான் உண்மையோ என்னவோ!

கருத்துரையிடுக